நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
தங்களது தியேட்டர்களை மிகவும் பிரபலப்படுத்த ஏதாவது சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள சில தியேட்டர்காரர்கள் நினைக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களது தியேட்டர்களைப் பற்றிய பல்வேறு பில்டப்புகளையும் கொடுத்து வருகிறார்கள். சென்னையில் உள்ள சில தியேட்டர்காரர்கள் பிரபலங்களை தங்களது தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரவழைத்து அதன் மூலம் பிரபலமாக்க முயல்கிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படங்களின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவை நடக்கின்றன. அதற்கு சில லட்சங்களைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள் அந்தத் தியேட்டர்காரர்கள். ஆனால், நகரின் மையப்பகுதியை விட்டு தள்ளியிருக்கும் தியேட்டர்களில் புதிய படங்களின் டிரைலர்களைத் திரையிடுவது, அதிகாலை காட்சிகளுக்குக் கொண்டாட்டங்களை அனுமதிப்பது என பிரபலமாக்க முயல்கிறார்கள்.
சமீபத்தில் 'லியோ' படத்தின் டிரைலரைத் திரையிட தங்களது தியேட்டரில் விஜய் ரசிகர்களை அனுமதித்தது சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர். டிரைலர் திரையீடு முடிந்த பிறகு பார்த்தால் ஒரு சில இருக்கைகளைத் தவிர மற்ற இருக்கைகள் அனைத்தையும் ரசிகர்கள் நாசம் செய்தது தெரிய வந்தது. ஆனால், அது குறித்து அவர்கள் காவல்துறையிலும் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இனி தியேட்டர்களில் டிரைலர் திரையிடல் கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என்பதையும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அது போலவே, அதிகாலை காட்சிகளால் தேவையற்ற சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுகிறது. அதனால், அவையும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
'லியோ' படத்தால் இப்படி சிக்கல் ஏற்படுவதால் எதிர்காலங்களில் டிரைலர் திரையிடல், அதிகாலை காட்சி ஆகியவற்றிற்கு சங்கத்தினரே மூடுவிழா செய்துவிடுவார்கள் எனத் தெரிகிறது.