Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு வெளியாகும் தமன்னாவின் முதல் மலையாள படம்

17 அக், 2023 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Tamannaah's-first-Malayalam-movie-releasing-for-Diwali

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கடந்த 20 வருடங்களாக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக மலையாளத்தில் நுழைந்துள்ள தமன்னா, நடிகர் திலீப் நடித்து வரும் 'பந்தரா' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு திலீப் வழக்குகளில் சிக்கி, சினிமாவில் இனிமேல் அவர் அவ்வளவுதான் என்கிற சூழல் நிலவியபோது அவருக்கு ராம்லீலா என்கிற ஹிட் படத்தை கொடுத்து நூறு கோடி வசூல் கிளப்பில் முதல் முறையாக அவரை இணைத்த இயக்குனர் அருண் கோபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ராம்லீலா கூட்டணிக்கான எதிர்பார்ப்புடன், காவாலா பாடல் மூலம் கடந்த சில மாதங்களில் கேரளாவிலும் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கிய தமன்னாவும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் இரு மடங்காகி உள்ளது. வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. தமன்னாவின் முதல் மலையாள படமே அவருக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படம் ரிலீஸ் ஆகும் சந்தோஷத்தில் பிறந்தநாள் கொண்டாடிய லியோ நடிகர்படம் ரிலீஸ் ஆகும் சந்தோஷத்தில் ... லியோ படத்திற்கு 4 மணி காட்சிக்கு அனுமதியில்லை: ஐகோர்ட் திட்டவட்டம் லியோ படத்திற்கு 4 மணி காட்சிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)