ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ருத்ரன் படம் தோல்வி அடைந்தது. சந்திரமுகி 2 சுமாரான வெற்றியை பெற்றது.
தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது, " பழைய கதைகள் இனி வேலைக்கு ஆகாது. கொரோனா காலத்திற்கு பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை இயக்குனர்கள் லோகேஷ், நெல்சன் ஆகியோர் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. திரைக்கதை மற்றும் சண்டை காட்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் . நானும் இந்த புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளேன். இதற்கு பதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.