அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது ‛லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர். ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கி உள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார்.
தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது தான் ஆர்வம். அப்பா விஜய்யை போல் ஹீரோவாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக களமிறங்கி உள்ளார். இவரின் முதல் பட இயக்கத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைகாவின் சுபாஸ்கரன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டு ஜேசன் விஜய்யை இயக்குனராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளனர்.