'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு |

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வக்கீல் மற்றும் கணக்கு தணிக்கையாளர் அறிமுகமும் நடைபெறுகிறது. நடிகர் சங்க கட்டட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து கார்த்தி பேசவுள்ளார். கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டடம் கட்டி முடிப்பதற்கு நிதி திரட்டுதல் குறித்து விஷால் கருத்துகளை முன்வைத்து பேசுகிறார்.
நடிகர் சங்க கட்டடம் பாதி கட்டப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் முழுமையடையாமல் உள்ளது. இதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை என்று கடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த கூட்டத்தில் கட்டடம் கட்ட தேவையான மீதமுள்ள நிதி திரட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.