நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பழம்பெரும் தயாரிப்பாளர், இயக்குனர், ஸ்டூடியோ அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மாப்பிள்ளை அருண் வீரப்பன். 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த இவர்தான் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அந்த படத்தில் அறிமுகப்படுத்தினார். ஏவிஎம் தயாரித்த படங்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார். 'உன்னிடத்தில் நான்' என்ற படத்தை இயக்கினார் 100க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி உள்ளார்.
90 வயதான அருண் வீரப்பன் மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக உடல் நல பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வீட்டுக்குள் தவறி விழுந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.