ஸ்பிரிட் படத்தில் வில்லன் ஆக விவேக் ஓபராய் | 'கர' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ், ஐசரி கணேஷ் | டாக்சிக் முதல் பாடல் மார்ச் 2ல் வெளியாகிறது | தமிழ் வெப் சீரிஸ்களில் முன்னணி நடிகர்கள் | தமிழ் சினிமாவில் தொடரும் விவாகரத்து… | விஜய்சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் முத்து என்கிற காட்டான் : டீசர் வெளியீடு | ரோபோ சங்கர் இறுதி சடங்கு : உருக்கமாக பேசிய விமல் | நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு | பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி | அரசியல் படத்தில் அபர்ணதி |

நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இது அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது மார்க்கெட் உயர்த்துவதற்காக மற்ற மொழிகளிலும் படம் நடித்து வருகிறார். அவரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவர் நடித்துள்ள ‛கிங் ஆப் கோதா' படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இவரின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் என இரு மொழி படமாக உருவாக உள்ள இந்த புதிய படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் இப்படத்திற்கு ' கோலி' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.