விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா | பாராட்டுகளை பெற்ற 'லிட்டில் விங்க்ஸ்': உயிரோடு இல்லாத இருவர் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கடந்த மாதம் ஜுலை 14ம் தேதி அறிவித்திருந்தார். 6 மாதங்களில் 125 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தினோம் என்று குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விடுபட்ட சில காட்சிகளை எடுப்பதற்காக மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளார்களாம். படத்திற்கான எடிட்டிங் நடக்கும் போதுதான் முதல் கட்டப் படப்பிடிப்பில் சில காட்சிகளை எடுக்காமல் விட்டதைக் கண்டுபிடித்தார்களாம். அதில் விஜய் நடிக்கும் சில காட்சிகளும் இருக்கிறதாம். ஆனால், விஜய் தற்போது வெளிநாட்டிற்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். அவர் இல்லாமலேயே டூப் போட்டு காட்சிகளைப் படமாக்கிக் கொள்ளலாம் என லோகேஷ் சொல்லிவிட்டாராம். இன்னும் இரண்டு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடக்கலாம் எனத் தெரிகிறது.
அதற்கான செலவு சில பல கோடிகள் வரை கூடுதலாக ஆகும் என்றாலும் படத்திற்கான வியாபாரம் சிறப்பாக நடந்து வருவதால் தயாரிப்பாளரும் போய் வாருங்கள் என சம்மதம் சொன்னதாகத் தகவல்.