'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி என முண்ணனி ஹீரோக்களின் படங்களுக்கு தற்போது பிஸியாக இசையமைத்து வருகிறார். ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜப்பான்' படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இந்த வருட தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது. இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
விரைவில் இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஜப்பான் படத்தில் ஒரு குத்து மெலடி பாடலை இசையமைப்பாளர் சான் ரோல்டன் பாடியுள்ளார். தனது சினிமா வாழ்க்கையில் சிறந்த மெலடி பாடலாக அமையும். சான் ரோல்டனுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.