ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பினார் அஜித். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருகிற பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள காவாலா பாடல் ஹிட் அடித்து மீண்டும் தமன்னா பரபரப்பு வளையத்திற்குள் வந்திருப்பதால், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். வீரம் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணையப் போகிறார் தமன்னா.




