'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? |
'ஆரம்பமே இறுதி சுற்று' ஆனால் அதில் தான் ஆரம்பித்தது இவரது நடிப்பு சுற்று... ரீலில் மட்டுமல்ல ரியலில் கூட ஏவுகணைகளாக தாக்கும் குத்துச்சண்டை, கனகச்சித கராத்தே வீராங்கனை, நடிப்பில் தெறிக்கும் துடிப்பு, ஆக் ஷன் காட்சிகளில் மிரட்டும் முறைப்பு... என 'கொலை' படத்தில் போலீசாக நடித்த ரித்திகா சிங் பேசுகிறார்...
இறுதி சுற்று முதல் கொலை வரை உங்க திரை பயணம்
அஜித், தனுஷ், விஜய், துல்கர் கூட நடிக்கணும், பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது கத்துக்கலாம். இந்த பயணத்தில் நிறைய பேர் கூட நடிக்கணும். இறுதி சுற்றில் நடித்த போது நல்ல கதையா நடிக்கணும்னு மாதவன் சொல்வாரு.
தென்னாப்பிரிக்கா கராத்தே சாம்பியன்ஷிப்...
உலக சாம்பியன் போட்டிகளில் 16 வயதில் பங்கேற்றேன். அதற்கு பின் தற்போது தான் பங்கேற்க போறேன். கொலை படப்பிடிப்பின் போதே பயிற்சியும் பண்ணினேன். பதட்டமா இருக்கு.
போலீஸ் உடையில் நடித்த அனுபவம்
என் கனவு நனவாகி இருக்கு. சின்ன வயசுல இருந்தே ஐ.பி.எஸ்., ஆபிசரா வரனும்னு ஆசை.. வர முடியலை. ஆனால், ஒரு நடிகை ஆன பிறகு, போலீஸ் கேரக்டரில் நடித்து சந்தோஷம். இயக்குனர் பாலாஜிக்கு நன்றி.
கொலை படம் பற்றி சொல்லுங்களேன்
100 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்காங்க. இந்த படத்துக்காக 10,000 சதுரடியில் வீடு கட்டி இருக்காங்க..100 மீட்டர், தார் ரோடு போட்டு இருக்காங்க. ஆர்ட் ஆறுசாமி, ஒளிப்பதிவு சிவா பண்ணிருக்காங்க.
நீங்களே டப்பிங் பேசி இருக்கீங்களா
நான் பேசலை... ஆனால், என் குரலில் பேசணும்னு ஆசை இருக்கு. இப்போ தெலுங்கு, தமிழ் கலந்து பேசுறேன். தமிழ் நல்லா பேச பழகிட்டு என் குரலில் சீக்கிரம் பேசுவேன்.