2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் ராஜசேகர் - யுவராஜ் கண்ணன் என்ற இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள். இருவரும் இணைந்து 'லாக்கர்' என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே 'இறுதிப்பக்கம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர்கள் கூறியதாவது : இது வங்கி கொள்ளையை மையமாக கொண்ட படம். முழுக்க முழுக்க சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை, அம்பத்தூர், குரோம்பேட்டை போன்ற இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணி நடந்து வருகிறது. என்றார்கள்.