லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புராஜக்ட் கே'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு, மற்ற அப்டேட்டுகள் ஆகியவை நாளை அமெரிக்காவில் நடைபெற உள்ள 'காமிக் கான்' நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.
இதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். “குட்மார்னிங் அமெரிக்கா, சூரியன் உதிக்கும் நகரத்திலிருந்து அன்புடன்…” என கமல்ஹாசன் அமெரிக்கத் தெருவில் நடந்து செல்லும் புகைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
“அமெரிக்காவில் தரையிறங்கியுள்ள ஆண்கள்” என்று குறிப்பிட்டு ஹாலிவுட் ஸ்டுடியோ செல்லும் சாலையில் நிற்கும் பிரபாஸ், ராணா டகுபட்டி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்கள்.
அமெரிக்காவில் படம் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் 'புராஜக்ட் கே' படத்திற்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைக்கும் என தெலுங்குத் திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.