பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் ஈஷா ரெப்பா. 'லைப் இஸ் பியூட்டிபுல்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 15க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஈஷா தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமானார். நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சுதிர் பாபு ஜோடியாக 'மாயா மச்சின்திர' படத்திலும் ஜெ.டி. சக்கரவர்த்தி ஜோடியாக 'தயா' படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கு பேசத் தெரிந்த தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல் மற்ற மொழி நடிகைகளுக்கே தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தரப்படுகிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் தமிழ், மலையாள படங்களில் நடித்தபோது அங்குள்ளவர்கள் தெலுங்கு பட திரையுலகை பற்றி சிலாகித்து பேசுவதை கேட்டு இருக்கிறேன். ஆனால் தெலுங்கு பட உலகில் தெலுங்கு மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கொடுக்கிறார்கள். மற்ற மொழி கதாநாயகிகளை வைத்துத்தான் படங்கள் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாரும் கேட்பது இல்லை. அப்படி இருக்கும்போது வேற்றுமொழி நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏன் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இங்கு மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகிலும் மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். என்றார்.