Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாந்த்ரா படப்பிடிப்பில் குடும்பத்தோடு சந்தித்து மகிழ்ந்த திலீப்-சரத்குமார்

18 ஜூன், 2023 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Dileep-Sarathkumar-enjoyed-meeting-with-his-family-on-the-set-of-Bandra

மலையாளத்தில் திலீப் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ராம்லீலா. இந்த படத்தின் இயக்குனர் அருண்கோபி, மீண்டும் திலீப்பை வைத்து தற்போது இயக்கி வரும் படம் பாந்த்ரா. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முறையாக மலையாளத் திரையுலகில் நுழைந்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் மிக முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக ராம்லீலா படத்திலும் திலீப்பின் அம்மாவாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா தற்போது இந்த படத்திலும் அதே கூட்டணியுடன் தொடர்கிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதில் ராதிகா சரத்குமாரும் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்த படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் கேரளாவிலும் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் அதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்றிருந்த சரத்குமார் அப்படியே படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் திலீப்பின் வீட்டிற்கும் மனைவி ராதிகாவுடன் விசிட் அடித்துள்ளார்.

அவர்களை வரவேற்ற திலீப் அவரது மனைவி காவ்யா மாதவன் தம்பதியினருடன் அந்த சமயத்தில் ஜாலியாக எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை நடிகை ராதிகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னதாக மலையாளத்தில் வெளியான கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்கிற படத்தில் திலீப் காவ்யா மாதவன் இருவருடனும் இணைந்து சரத்குமார் நடித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் வட்டாரத்தில் இருந்து விஜய்க்கு வந்த எதிர்ப்பும் - ஆதரவும்!அரசியல் வட்டாரத்தில் இருந்து ... லியோ படத்தில் இணைந்த வையாபுரி லியோ படத்தில் இணைந்த வையாபுரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)