மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
சாகுந்தலம் படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‛குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. அதோடு ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் சிட்டாடல் என்று வெப் தொடரிலும் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்து வருகிறார். மேலும் இந்த தொடர் ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் சிட்டாடல் என்று வெப் தொடரின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த தொடரில் படுக்கையறை, லிப்லாக் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமேசான் பிரைமில் இந்த தொடரின் எபிசோடுகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஹிந்தியில் சமந்தா நடிப்பில் ரீமேக் ஆகி வரும் இந்த சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ராவைப் போலவே சமந்தாவும் படுக்கையறை, லிப் லாக் காட்சிகளில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இப்படி ஒரு தகவல் பாலிவுட் மீடியாக்களில் வெளியானதை அடுத்து சமந்தாவின் கிளுகிளுப்பான நடிப்பை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.