ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

கடந்த சில நாட்களாக பர்ஹானா படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு, நடிகை ராஷ்மிகா குறித்த கருத்துக்கு விளக்கம் என பரபரப்பான செய்திகளில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இது ஒரு பக்கம் இருக்க ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் நடித்துள்ள அஜயண்டே ரெண்டாம் மோசனம் (ஏ.ஆர்.எம்) என்கிற படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் இதில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
ஜித்தின்லால் என்பவர் இயக்கிவரும் இந்தப்படம் மூன்று வித காலகட்டங்களில் நிகழும் பீரியட் படமாக இது உருவாகியுள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடன் சாட்டிங்கில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் குறித்து கூறும்போது, “இந்த படத்தில் எனது கதாபாத்திரம் சிறிது தான். என்றாலும் கதைக்கு ரொம்பவே முக்கியமானது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. விரைவில் இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக மலையாளத்தில் துல்கரின் ஜோமோண்டே சுவிசேஷங்கள், நிவின்பாலியின் சகாவு ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




