டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் நேற்றே நாம் சொன்னபடி 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் வெளியான நான்கே நாட்களில் 200 கோடி வசூல் என்பது சாதாரணமல்ல. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள்.
முதல் பாகம் அளவிற்குக் கலகலப்பாக, சுவாரசியமாக இல்லை என்று சிலர் சொன்னாலும், இரண்டாம் பாகத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருப்பது தெரிகிறது. நேற்று வரை விடுமுறை நாள் என்பதால் வசூல் மழை பெய்திருக்கிறது.
இருப்பினும் கோடை விடுமுறை நாட்கள் என்பதால் வேறு எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாகவில்லை என்பதால் வசூல் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் 32 நாட்களில் தான் 500 கோடி வசூலைத் தொட்டது.
அதைவிடக் குறைந்த நாட்களில் 'பொன்னியின் செல்வன் 2' 500 கோடி வசூலைத் தொடுமா என்பதே இப்போதைய கேள்வி. அது நடந்தால் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சாதனையாக அமையும்.