ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா |

நடிகர் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரைக்கு வருகிறது. இப்போது சைரன், இறைவன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, குட்டி புலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது முழுக்க கிராமத்து கதையில் தயாராக உள்ளது. முதன்முறையாக ஜெயம் ரவி படம் முழுக்க வரும் கிராமத்து வேடத்தில் நடிக்க போகிறார்.




