Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

27 மே, 2026 - 06:17 IST
எழுத்தின் அளவு:
Bhagyashri-Borse-jumped-for-joy
Advertisement


2025ல் வெளிவந்த துல்கர் சல்மான் நடித்த 'காந்தா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், 'தாய் கிழவி' இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'சேயோன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், “மிகவும் அன்பிற்குரிய கமல்ஹாசன் சார், உங்களின் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டே வளர்ந்த, என் மனதிற்குள் இருக்கும் அந்தச் சிறுமி... நீங்கள் என் தோள்களின் மீது கைகளை வைத்து, எனக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அந்த நொடியில், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறேன்; உங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் நான் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி'எல்லம்மா' தெய்வ வழிபாடு : ... 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் 'மாளிகைப்புரம்' இயக்குனரின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap