'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்கில் நடித்துள்ள இவருக்கு இப்போது பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
சாஹோ திரைப்படத்தின் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவல் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . இந்த படத்தை ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாராக்கிறது. கேங்க்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ரீ லீலா இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் மும்பையில் தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போது இன்னொரு கதாநாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




