‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க உள்ளார் கிரிக்கெட் அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ரஜினியுடன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்க உள்ளன. ரஜினிகாந்த் தற்போது நடந்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.