பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
நடிகை மீனா 1982ம் ஆண்டு சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து பிரபலமானார் . பின்னர் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, எஜமான் வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினிக்கும் ஜோடியாக நடித்தார் மீனா. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த மீனா, சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதை கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டு மீனாவை வாழ்த்தியிருக்கிறார்.
அது மட்டுமின்றி 1980 - 90களின் முன்னணி நடிகைகளான ராதிகா, ரோஜா, தேவயானி, சினேகா, சங்கவி உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களுடன் நடிகர்கள் சரத்குமார், ராஜ்கிரண், இயக்குனர்கள் கே .பாக்யராஜ், கே .எஸ். ரவிக்குமார், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மீனாவை வாழ்த்தியிருக்கிறார்கள்.