மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் | கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் தப்பிய விஜய் தேவரகொண்டா | லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? |
இந்தியன் படத்தை அடுத்து மீண்டும் கமல்ஹாசனும் - ஷங்கரும் இணைந்திருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் , ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திராவில் உள்ள வனப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. அப்போது தினமும் ஹெலிகாப்டரில் சென்று இறங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கமல். இந்நிலையில் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள சில முக்கிய ஸ்டுடியோக்களில் நடக்க உள்ளது. கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, மே மாதத்திற்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு இறுதிக்கட்டப் பணிகளை தொடங்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.