சிவகார்த்திகேயன் புதிய படத்தின் இயக்குனர் இவரா? | 29 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து |

விஜய் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிப்படமாக உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீசாக இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படத்தில் தீ என்கிற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்.
சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், சிம்பு இந்த படத்தில் பாடியுள்ள பாடல் பற்றி குறிப்பிட்டு இந்த பாடலை பாடுவதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெற்றுக்கொள்ளவில்லை என கூறி சிம்புவின் பெருந்தன்மை குறித்து சிலாகித்து பாராட்டினார்.