‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கடந்த 2009ம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஈரம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. வித்தியாசமான த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு 'சப்தம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தமன் இசையமைக்கவுள்ளார். 7ஜி பிலிம்ஸ் மற்றும் அறிவழகனின் ஆல்பா பிரேம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ஆதி தனது மனைவி நிக்கி கல்ராணியுடன் கலந்து கொண்டார். அதோடு இயக்குனர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த படப்பூஜைக்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.




