அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி | சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்' | 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி | ‛கருப்பு ஸ்டார்' பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில் | ‛வாரண்ட்' வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள் | ‛பெத்தி' படத்துக்காக ராம்சரணுக்கு தேசிய விருது நிச்சயம் ; நடிகர் ரவிகிஷன் உறுதி | அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள் | முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி |

கடந்த 2002ம் ஆண்டில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் பாபா. அப்படம் வெளியான நேரத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகளால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் பாபா பட விநியோகஸ்தர்களிடம் தான் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்தார் ரஜினி.
என்றாலும் தற்போது மீண்டும் பாபா படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதற்கு ரஜினி ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்த பாபா படத்தில் பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த படத்தில் ரஜினிக்கு 7 வரங்கள் கொடுக்கப்பட்டு அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவார். ஆனால் இந்த டிஜிட்டல் பாபாவில் ஐந்து வரங்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதனால் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஜப்பான் பெண்ணுக்கு உதவி செய்ய ரஜினி உச்சரிக்கும் மந்திரமும் எடிட் செய்யப்பட்டுள்ளது. அதோடு கிளைமாக்சும் மாற்றப்பட்டு பாபாவுக்கு மறு ஜென்மம் கொடுக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.




