'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை | 'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ் | ஜெயிலர் 2 படத்தை ஜூன் மாதத்திலேயே வெளியிட திட்டம் | அமீர்கான் மகனுக்கு ஜோடியான தமன்னா | ரூ. 40க்கு தனது சாப்பாடு தரும் அர்ஜித் சிங் | தயாரிப்பு நிறுவனம் துவங்கும் ரியோ ராஜ் |

பார்த்திபன் இயக்கி, நடித்து ஒரே ஷாட்டில் எடுத்த ‛இரவின் நிழல்' படம் திரைக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது அப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் சிறிய பழுவேட்டரையராக நடித்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த நிலையில் அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருப்பதாக சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார் பார்த்திபன்.
இந்த நிலையில் தற்போது கொச்சியில் இருந்தபடி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மெதுவே நகரும் படகுகள் நடுவே நாட்களைப் போலவே கடந்து செல்லும் அந்த கரும் படகு. இன்று கொச்சி , நாளை கோவை, நாளை மறுதினம் காங்கேயம் ஊர் ஊராய் ஊர்ந்து செல்கிறேன். ஊற்றெடுக்கும் கற்பனைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் ஒரு படைப்பு விரைவில்'' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
தான் விரைவில் அடுத்த படத்தை அறிவிக்கப்போவதை இப்படி அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.