லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், வெந்து தணிந்தது காடு படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். முதல் பாகம் அடுத்த மாதம் திரைக்கு வரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தில் சிம்பு ஒரு சாதாரண இளைஞராக இருந்து கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். இரண்டாம் பாகம் அந்த கேங்ஸ்டர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சொல்லும் கதையில் உருவாகிறது என்று ஒரு புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன். அதோடு தற்போது பத்து தல படத்திலும் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.