குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா. அடுத்த அசின் என அந்தப் படத்தின் விழா ஒன்றில் நடிகர் விஜய்யின் பாராட்டுக்களைப் பெற்றவர். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் அசின் அளவுக்கு முன்னணி நடிகையாக அவரால் வர முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்தவர். தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தவர், தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் நிச்சயதார்ர்த்தம் நடந்தது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஷாம்னா காசிம் தான் சினிமாவுக்காக பூர்ணா. கடந்த சில நாட்களாக பூர்ணாவின் திருமணம் ரத்து என சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. அவற்றை மறுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எப்போதும் என்னவர்,” எனப் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பூர்ணா.
பூர்ணாவின் அடுத்த தமிழ்ப் படமாக மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள 'பிசாசு 2' படம் வெளிவர உள்ளது.