ஆளுமை உரிமை பாதுகாப்பு பெற்றார் ஜுனியர் என்டிஆர் | வாரணாசியில் 'வாரணாசி' வெளியீட்டுத் தேதி பேனர்கள்? | சிறந்த நடிகர், சிறந்த நடிகைகளுக்கான விருதை அறிவித்தது தமிழக அரசு | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் தேர்வு ? | தனுஷ் 55ல் சாய் அபயங்கர் | சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்? | 'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! | 'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு | திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா... | லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? |

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கடின முயற்சியால் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு அடுத்தப்படியாக சிவகார்த்திகேயன் படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப ஆடியன்ஸ் அதிகம். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தன. டான் படத்தை ரஜினி பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினியை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசி உள்ளார். இதுதொடர்பான ஒரு போட்டோவை பகிர்ந்து சிவகார்த்திகேயன் கூறியதாவது : ‛‛இந்திய சினிமாவின் ‛டான்' சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். 60 நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களின் பொன்னான நேரத்திற்கும், டான் படத்திற்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்திற்கும் நன்றி தலைவா'' என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.




