ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? |
இந்தியத் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத ஒரு பெருமை 'கேஜிஎப்' படத்தின் அறிமுக நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்குக் கிடைத்துள்ளது. அவர் அறிமுகமான படமே மாபெரும் வெற்றியைப் பெற்றது ஒரு பக்கம். அப்படத்தின் இரண்டாம் பாகம் 1000 கோடியைத் தாண்டியது மற்றொரு பக்கம். இரண்டு பாகங்களாக வெளிவந்த படம் என்றாலும் 'கேஜிஎப்' நாயகி என்றுதான் அவரைச் சொல்வார்கள்.
ஸ்ரீநிதி ஷெட்டி இப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பு சில அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வென்றுள்ளார். 2015ல் மிஸ் கர்நாடகா, 2016ல் மிஸ் திவா சுப்ராநேஷனல், மிஸ் சுப்ராநேஷனல் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். 2015ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா போட்டியில் பங்கேற்றார். மிஸ் குயின் இந்தியா அழகிப் போட்டியில் முதல் ரன்னர் அப்பாக வென்றுள்ளார். அப்போது அவர் பிகினியில் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
ஸ்ரீநிதியின் அடுத்த படம் தமிழில் தான் வெளியாக உள்ளது. விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தில் அவர்தான் கதாநாயகி.