
விக்னேஷ் சிவன், நயன்தாரா - வேலைக்கு நடுவுல கொஞ்சம் காதல்
விக்னேஷ் சிவன் தற்போது "காத்து வாக்குல ரெண்டு காதல்" பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அந்த வேலைக்கு நடுவிலும் நயன்தாராவைக் காதலிக்கும் வேலையை மறக்காமல் செய்து வருகிறார். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு இருவரது செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அதோடு, “கடைசி கட்ட வேலைகளுக்கு நடுவில் கொஞ்சம் மூச்சு விடும் நேரம். படம் சென்சாருக்குத் தயாராகி வருகிறது. நல்லதே நடக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். இன்று முதல் அனைத்து அப்டேட்டுகளும் வரும் என்றும்,” குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்க அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள "காத்து வாக்குல ரெண்டு காதல்" படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!