ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛பீஸ்ட்'. அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்தமாதம் படம் வெளியாக உள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார் நெல்சன். இதனிடையே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இருந்து முதல் பாடலாக அரபிக் குத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அடுத்து இரண்டாவது பாடலை மார்ச் 19ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளார். இதற்கான புரொமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய், பூஜா, அனிருத், நெல்சன் ஆகியோர் ஜாலியாக பாடுவது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சினிமாவின் ஆரம்பகாலம் முதலே தனது படங்களில் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ள விஜய் கடைசியாக வெளியான மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை பாடினார். இப்போது இந்த பாடலை பாடி உள்ளார். பொதுவாகவே விஜய் பட பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருக்கும். இப்போது விஜய்யே இந்த பாடலை பாடியிருப்பதால் அது இன்னும் அதிகமாகி உள்ளது.