சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழில் ஜூலை காற்றில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் தெலுங்கில் வெளியான பீம்லா நாயக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா மேனன். அதுமட்டுமல்ல தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் நடிக்கும் வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து கிடைத்த இடைவெளியில் ஓய்வுக்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா பறந்துவிட்டார் சம்யுக்தா மேனன். பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்வது, கங்கை நதியில் நீராடுவது என்பது இவரது கனவாகவே இருந்து உள்ளது. தற்போது உத்தரகாண்ட் பகுதியில் விடுமுறையை கொண்டாடிவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சம்யுக்தா மேனன் கூடவே தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஓடும் கங்கை நதியின் சலசலப்பை கேட்க முடிகிறது. இமயமலையில் இருந்து வீசும் தென்றல் என்னை வருடுகிறது. இதற்கு முன் நான் இங்கே இருந்து இருக்கிறேன்.. இங்கேயே வாழ்ந்து இருக்கிறேன் என்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. என் சிறுவயது கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார் சம்யுக்தா மேனன்.