ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சூர்யா படங்கள் என்றாலே ரிலீஸ் ஆவதற்கு முன்பும் ரிலீசான பின்பும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக கடும் சர்ச்சை எழுந்தது. தற்போது சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக்ெகூறி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய நேதாஜி சங்கத்தின் தலைவரான ராகுல் காந்தி என்பவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் உள்ளம் உருகுதய்யா பாடலில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தமிழ் கடவுளின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாகவும், அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த பாடலை இயக்கிய பாண்டிராஜ் நடித்த சூர்யா, எழுதிய யுகபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.




