சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் இன்று(பிப்., 19) காலை 7 மணிக்கு துவங்கியது. நடிகர் விஜய் சென்னை, நீலாங்கரை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுபதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே வந்து ஓட்டளித்தார். விஜய்யை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து ஓட்டுப்போட்டுவிட்டு வந்த விஜய், தன்னால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ வைரலானது.
கடந்தமுறை சட்டசபை தேர்தலின் போது சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் இன்று, சிவப்பு நிற மாருதி காரில் வந்து ஓட்டளித்து சென்றார்.
![]() |