ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பாடியதாக 'பீப் சாங்' ஒன்று இணையதளங்களில் ஒலித்தது. அந்தப் பாடல், பெண்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்தது. இந்த பாடலை பாடிய சிம்பு, இசை அமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
பெண்கள் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி நடிகர் சிம்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இறுதியில் விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் பதிவு செய்யபட்ட வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டதோடு. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.




