
இம்மாதம் ‛விக்ரம் நிறைவு
பிப் 08, 2022
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛விக்ரம்". அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி வரும் இந்த படம் கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மாத இறுதியில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. அதன்பிறகு மற்ற பணிகள் துவங்கி கோடையில் படத்தை வெளியிட எண்ணி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. லோகேஷின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இன்னும் அதிரடியாக, கூடுதலாகவே இருக்கும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!