நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் |
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. டாக்டருக்கு படித்த இவர் தற்போது நடிப்பின் மீது கொண்ட காதலால் நடிகை ஆகிவிட்டார். விருமன் படத்தில் கார்த்திக் ஜோடியாக அறிமுகமாகி உள்ள அதிதி அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க இருக்கிறார். விருமன் வெளியீட்டுக்கு பிறகு இந்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.
அதிதி முறைப்படி நடனமும், சங்கீதமும் படித்தவர். எதிர்காலத்தில் சிறந்த பாடகியாகும் திட்டத்திலும் இருக்கிறார். இந்த நிலையில் இசை அமைப்பாளர் தமன், அதிதியை பாடகியாக்கி இருக்கிறார். தமனை பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக்கியவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் தயாராகும் கானி என்ற படத்தில் ரோமியோ... ஜூலியட்... என்று தொடங்கும் காதல் பாடலை பாடி உள்ளார். இந்த படத்தில் வருண் தேஜ், நவீன் சந்திரா, நதியா, உபேந்திரா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கோரபதி இயக்குகிறார்.