சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு |

ஆர்ஆர்ஆர் என்கிற பிரமாண்டமான படம் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் நிகழ்ச்சிகளை எல்லாம் களைகட்டும் விதமாக நடத்தி ரிலீஸுக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கே அனுமதி என்கிற அரசின் நிபந்தனையால் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் இல்லை என அறிவித்து விட்டார்கள்.. இந்தப்படத்தின் திடீர் விலகலால், தமிழில் ஜன-26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் ஜன-14ஆம் தேதிக்கு தங்களது ரிலீஸை மாற்ற முயற்சிக்கிறது.
அதேபோல தெலுங்கிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளிப்போவதால், அதை சாதகமாக்கி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள '1945' என்கிற படம் வரும் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெஜினா கதாநாயகியாக நடிக்க, நாசர், சத்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் மடை திறந்து என்கிற பெயரில் உருவானது
ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த சில வருடங்களாகவே இந்தப்படம் கிடப்பில் கிடந்தது. இந்தநிலையில் தெலுங்கில் '1945' என்கிற பெயரில் வெளியாகிறது.




