25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கு; சூடுபிடிக்கும் வாதங்கள்; இன்றே தீர்ப்பு? | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி | ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை |

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத், நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி உள்ள இரண்டாவது படம் ‛வலிமை'. ஹிந்தி நடிகை ஹூயுமா குரேஷி நாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். போலீஸ் கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்பட டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. வலிமை படம் பொங்கல் வெளியீடாக ஜன., 13ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது ஒமிக்ரான் வடிவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை படம் தள்ளிப்போகுமா அல்லது 50 தியேட்டர்களிலேயே ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் ஜன., 13ம் தேதி படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளார். இதுதொடர்பாக புரொமோவை ஒன்றை வெளியிட்டு ‛வலிமை' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஜன., 13ல் தியேட்டர்களில் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் படமும் இதே மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தது. இருப்பினும் 50 சதவீதம் இருக்கைககளில் தைரியமாக படத்தை களமிறக்கி வசூலை அள்ளினர். அதேப்போன்று அஜித்தின் வலிமை படமும் வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.




