15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்தனர் : ஜான்வி கபூர் வேதனை | சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு? | டிரைலருக்கு தனி எடிட்டர் தேவையா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர் | 'யூத் 2' உருவாகுமா? கென் கையில் முடிவு | ஏப்ரல் 10ல் ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி | அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன் | டாக்டர் ராஜசேகருக்கு 'கம்பேக்' கொடுத்த 'பைக்கர்' | மழையால் 'எல்ஐகே' விழா தள்ளி வைப்பு | விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன் | ‛ரஞ்ஜன்' ஆன ‛கோர்ட்' : அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிக்கிறார் |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. காலா புகழ் நடிகை ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. நேற்று படத்தின் டிரைலரை வெளியிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டனர். அந்தளவுக்கு படத்தில் ஹாலிவுட் தரத்திலான ஆக்ஷன் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டிரைலர் வெளியாகி 24 மணிநேரத்திற்குள் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. வலிமை படம் பொங்கல் வெளியீடு என்று மட்டுமே இதுநாள் வரை கூறி வந்தனர்.
இந்நிலையில் படத்தின் சென்சார் தகவல் உடன் பட வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்று கிடைத்துள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைமும் வெளியாகி உள்ளது. படம் கிட்டத்தட்ட 3 மணிநேர படமாக உருவாகி உள்ளது. அதோடு வலிமை படம் ஜன., 13ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பொங்கல் பண்டிகையை வலிமை உடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.