டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் விருமன் படத்தில் நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த படத்தில் தான் நடிக்கும் தேன்மொழி என்ற கதாபாத்திரத்திற்காக மதுரை தமிழை முறையாக கற்றுக் கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் விருமன் படத்தில் அதிதி மிக சிறப்பாக நடிப்பதாக இயக்குனர் முத்தையா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சிம்பு நடிக்கும் ஒரு படத்திற்கும் அதிதி ஷங்கரிடத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தற்போது மாநாடு படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்கிறார் சிம்பு . இதில் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அதிதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து விரைவில் உறுதியாக செய்தி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.