பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம், அதன் நாயகனான ஆர்யாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்ல, அதில் நடித்த பல நட்சத்திரங்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கான வாசலையும் திறந்து விட்டுள்ளது. அந்தப்படத்தில் கதாநாயகி துஷாரா விஜயனுக்கு அடுத்தடுபடியாக படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
தமிழில் இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்திருந்தாலும், சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி இவர்மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. இதன்மூலம் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. வினீத்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்