மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கிறார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். தற்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கமல் கூறியதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை அறிக்கை
கமல் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : ‛‛லேசான காய்ச்சல் மற்றும் சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து அவர் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.