ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் மூலம் புகழ்பெற்றவர் சம்யுக்தா, அதன் பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். தற்போது குத்துக்கு பத்து என்ற வெப் சீரிசில் நடித்துள்ளார்.
டெம்பிள் மங்கி என்கிற யு டியூப் சேனல் புகழ் விஜய் வரதராஜ், பல்லுபடமா பாத்துக்கோ படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது குத்துக்கு பத்து வெப் தொடரை இயக்கி உள்ளார். இதனை டி கம்பெனி சார்பில் ஏகேவி.துரை தயாரித்துள்ளார்.தற்போது இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்து, டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
இது 7 எபிசோடுகள் கொண்ட இணைய தொடராக உருவாகியுள்ளது. இதில் சம்யுக்தாவுடன் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரீ, செங்கி வேலு, திவாகர், ஜானி நடித்துள்ளனர்.
ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலமுரளி பாலா இசை அமைத்துள்ளார். விஜய் வரதராஜ் இயக்கிய பல்லுபடாம பார்த்துக்கோ படம் அடல்ட் கண்டன்ட் படம் என்பதால் இந்த தொடரும் அதுபோன்ற ஒரு தொடர் என்றும் கூறப்படுகிறது.