லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி |

கோவையை சேர்ந்தவர் அதுல்யா ரவி. அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன்பிறகு யாமிலி, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 படங்களில் நடித்தார். தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக படங்களில் நடித்து வருகிறார்.
ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தனது பெருமையை அழித்து விட்டதாக அதுல்யா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛பாலியல் துன்புறுத்தலால் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவமானமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் அருகில் தான் எங்கள் வீடு. அந்த பகுதியில் வளர்ந்தற்காக நான் எப்போதும் பெருமைப்படுவேன். இந்த சம்பவம் அந்த பெருமையை அழித்துவிட்டது. என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்றார்.