லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் என்பவர் இன்னொரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. இந்தப்படத்திற்கு பூஜை போடப்பட்ட அன்றே பூஜையில் கலந்துகொண்ட அவரும் தான் இந்தப்படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினார்.
தற்போது அபர்ணா தாஸ் விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. கடந்த மே மாதமே இவரது காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டு இருந்ததாம்.. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அது தள்ளிப்போய், சமீபத்தில் தான் அவர் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமக்கப்பட்டனவாம். இவர் ஏற்கனவே மலையாளத்தில் பஹத் பாசிலுடன் 'ஞான் பிரகாசன்' மற்றும் வினீத் சீனிவாசனுடன் 'மனோகரம்' என இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.