தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா என்கிற படம் சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மிரட்டலான வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படமும் இதுதான். செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படம் கதையின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இருவருக்குமான மோதல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த காட்சிகளை படமாக்கி முடித்தால் முதல் பாகத்திற்கான அனைத்து காட்சிகளும் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.




